Connect with us

நான் வெளியேறமாட்டேன்- தன்னம்பிக்கையோடு முகின்!

Entertainment

நான் வெளியேறமாட்டேன்- தன்னம்பிக்கையோடு முகின்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துள்ளது. நாட்கள் ஆக ஆக, பரபரப்பு அதிகமாகியுள்ளது.

16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த கஸ்தூரியுடன் சேர்ந்து 9 போட்டியாளர்கள்  வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ce1633e5db1fe5d92d87b4740f095f57

இந்நிலையில், வார இறுதியான நேற்று கமல் ஹாசன் எவிக்ஷன் பற்றிய பேச்சைத் துவங்கினார். சேரன், கவின், லோஸ்லியா, முகென், ஷெரின் ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் பட்டியலில் இருந்தனர்.

கமல்ஹாசன் எவிக்ஷன் குறித்து, யாரெல்லாம் வெளியில் செல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்க, உடனே முகின் தனக்கு மக்கள் ஆதரவு இருக்கும் என்பதால், நிச்சயம் வெளியேற மாட்டேன் என்றார்.

அவரை அடுத்து ஷெரின் தனக்கு இதுதான் உண்மையான முதல் நாமினேஷன், அதனால் நெர்வசாக இருப்பதாக தெரிவித்தார்.

 லோஸ்லியா வெளியில் செல்ல தயாராக உள்ளதாக கூறினார், அவர் வெளியேறிவிடுவார் என்ற பயம் உள்ளே வந்ததுபோலத் தெரிந்தது.

 கவின் போன வாரமே செல்ல ரெடி ஆகிவிட்டேன். எல்லாம் பேக்குடுதான், எதுவாக இருந்தாலும் நான் ரெடி என்றார்.

இறுதியில் சேரனும் தான் வந்ததற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது, நிறைய கற்றுக் கொண்டேன் என்று மனம் நெகிழ சொன்னார். rved”: ����“

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top