Connect with us

எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்: அல்லு அர்ஜுனும் திட்டவட்டம்!!!

allu arjun

பொழுதுபோக்கு

எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்: அல்லு அர்ஜுனும் திட்டவட்டம்!!!

தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் அன்மையில் வெளிவந்த புஷ்பா படமானது பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது குறிப்பாக ராஷ்மிகாவிற்கு ஜோடியாக ஸ்ரீவள்ளி என்ற பாடல் மாஸ் காட்டியது.

அதோடு சமந்தாவுடன் ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல் வைரல் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

saami saami fails to match hype around allu arjuns pushpa 001 1 1

அந்த படத்தில் அல்லு அர்ஜுன்னு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மற்றும் விளம்பர வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அதன் படி, சமீபத்தில் குட்கா நிறுவனம் ஒன்று தங்களது விளம்பரங்களில் 10 கோடி ரூபாய் சம்பளத்தில் நடிக்க நடிகர் அல்லு அர்ஜுனிடம் கேட்டபோது நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

pushpa allu 1639713374

அதோடு எத்தனைக்கோடி கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top