இளையராஜா எங்க கட்சியை சேர்ந்தவர் கிடையாது! ஆனாலும் அவருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க கடிதம் எழுதுவேன்..!
ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 132 வது பிறந்த நாள் அன்று இளையராஜா கருத்து ஒன்று கூறியிருந்தார். அதன்படி அம்பேத்கரோடு பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கூறியிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
ஆனால் பாஜகவினரோ இந்தியா சுதந்திரமான நாடு இதில் கருத்து சுதந்திரம் உண்டு என்றும் இளையராஜா கருத்து பற்றி அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இளையராஜா தன் கருத்தில் பின்வாங்கப் போவதில்லை என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறியதாக கூறினார்.
இன்று இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா கருப்பு திராவிடன், பெருமையான தமிழன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவ்வாறுள்ள நிலையில் தற்போது இளையராஜா கருத்து பற்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி இளையராஜா பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர் அல்ல என்றும் அவர் எட்டரை கோடி மக்களின் அன்பைப் பெற்ற மனிதர் என்றும் கூறினார். இதனால் இளையராஜாவின் கருத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கூறினார். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க நாங்கள் மத்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவேன் என்றும் கூறினார்.
