Connect with us

மதிப்பெண் மட்டுமல்ல பதக்கங்களையும் வெல்வேன்: சட்டசபையில் முதல்வர் காரசார பேச்சு !!

stalin new16

தமிழகம்

மதிப்பெண் மட்டுமல்ல பதக்கங்களையும் வெல்வேன்: சட்டசபையில் முதல்வர் காரசார பேச்சு !!

மதிப்பெண் மட்டுமல்ல பதக்கங்களையும் வெல்வேன்: சட்டசபையில் முதல்வர் காரசார பேச்சு !!

தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 10 மாதங்களாக  எந்தெந்த  திட்டத்தினை நிறைவேற்றினார்  என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இதற்கு பதில் அளித்த முதல்வர் இது எனது அரசு அல்ல நமது அரசு என்பதனை சட்டசபையில் பலமுறை கூறியதாகவும் இந்த கருத்தினை பின்பற்றி நமது அரசின் நிலைபாட்டினை நிறைவேற்றுவதாக அவர் கூறினார்.

இதனிடையே தொடர்ந்து 10 மாதங்களாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் நிலையில் 10 மாத குழந்தையிடம் 10ம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்பதுபோல இருப்பதாக கூறினார்.

இதனைதொடர்ந்து எதிர்கட்சி தலைவர்களிடம் இந்த குழந்தை 10 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் மட்டுமில்லாமல் பட்டபடிப்பிலும் பதக்கங்கள் வெல்லும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், நமது அரசு சொன்னது மட்டுமில்லாமல் சொன்னதற்கு மேலாக செய்து காட்டும் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் எதிர்கட்சிகள் நிறைவேற்றப்படாமல் இருந்த திட்டங்கள் தற்போது மக்களுக்கு தேவைப்பட்டால் அவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top