‘காவி அணிவிக்க மாட்டேன்’.. அர்ஜுன் சம்பத் உத்தரவாதம்!!

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் விபூதி பூசியவாறும், காவி சட்டை அணிந்த படி போஸ்டரில் இடம்பெற்று இருந்தது.

இதன் காரணமாக பெரும் பரபரப்பி ஏற்பட்ட நிலையில் பல தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக முன்னணி நிர்வாகி குருமூர்த்தி கும்பகோணம் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அப்போது இந்து முன்னணி நிர்வாகி அர்ஜூன் சம்பத் அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன் எனவும் விபூதி, குங்குமம் பூசமாட்டேன், தனிப்பட்ட நபருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பமாட்டேன் என கூறினார்.

மேலும், அம்பேத்கரை இழிவுபடுத்தும் போஸ்டரை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.