
பொழுதுபோக்கு
இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை மட்டும் எடுக்கவே மாட்டேன்..கே.எஸ். ரவிக்குமார் ஷாக்கிங் அப்டேட்…
கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய படங்கள் அனைத்தும் வெற்றிக்காக கொண்டாடப்படுகிறது. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழமையாக கொண்டிருப்பார்
கே எஸ் ரவிகுமார் காமெடி, நாடகம் மற்றும் த்ரில்லர் போன்ற எண்ணற்ற பல முக திரைப்படங்களை இயக்கியவர். இவர் இப்பொழுது பெரிதும் படங்களை இயக்கவில்லை என்றாலும் படங்களில் நடிப்பது தயாரிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர் தயாரிப்பில் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் கூகுள் குட்டப்பா. இது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து கோப்ரா படத்திலும் நடித்துவருகிறார் கேஎஸ் ரவிக்குமார்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தசாவதாரம். முதல் நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 16 மில்லியன் டாலர்கள் மொத்தமாக வருமானம் ஈட்டியது மற்றும் இப்படம் மிக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றானது.
அண்ணாத்த.. பீஸ்ட்.. எதற்கும் துணிந்தவன் – படங்கள் குறித்து உதயநிதி ஓப்பன் டாக் !!
தசாவதாரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதுகுறித்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சொன்னது எனக்கும் சரி கமலுக்கும் சரி எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது என கூறி ஷாக் கொடுத்துள்ளார். எனவே
தசாவதாரம் 2 உருவாக வாய்ப்பே இல்லை என கூறினார். இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
