பதவி விலக மாட்டேன்..! கோத்தபய ராஜபக்சே திட்டவட்டம்….

இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதனால் அந்நாட்டில் வாழும் பொதுமக்கள் அத்தியாவச பொருட்களுக்கள் கூட வாங்க முடிய நிலையில் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் எரிபொருட்கள் கூட வாங்க முடியாத நிலை உருவாகி இருப்பதால் இலங்கையின் முக்கிய நகரமாக கொழும்பில் நாளோன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு செய்யப்படுகிறது.

இதனால் அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இலங்கை அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் நாளை மாலை புதிய அமைச்சரவை பதவியேற்க நாமல் ராஜபக்ச, பசில ராஜ பக்ச, சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச ஆகியோர்களை புதிய அமைச்சராக பதவி ஏற்காதிருக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது நிலவிவரும் சூழலில் எதிர்க்கட்சியினரை புதிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த போது அவர்கள் முன்வராத காரணத்தினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்த இலங்கை அதிபர் பதவிக்காலம் முடியும் வரை பதவி விலக மாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment