Connect with us

நான் மாஸ்க்கும் போடமாட்டேன்! அபராதமும் செலுத்த மாட்டேன்!! போலீசாருடன் வாக்குவாதம்;

fine 1

செய்திகள்

நான் மாஸ்க்கும் போடமாட்டேன்! அபராதமும் செலுத்த மாட்டேன்!! போலீசாருடன் வாக்குவாதம்;

நான் மாஸ்க்கும் போடமாட்டேன்! அபராதமும் செலுத்த மாட்டேன்!! போலீசாருடன் வாக்குவாதம்;

இன்றைய தினம் நம் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது 2022 ஆம் ஆண்டின் மூன்றாவது முழு ஊரடங்கு ஆகும். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் முக கவசம் அணியாதவர்களிடமும் 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நான் முக கவசம் போட மாட்டேன் 500 ரூபாய் அபராதமும் தரமாட்டேன் என்று ஒருவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. முழு ஊரடங்கு நாளான இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் கிருமிநாசினி பொது இடங்களில் தெளிக்கப்பட்டு வந்தன.

அப்போது பணியில் இருந்த காவலர்கள் முக கவசம் அணியாதவர்கள் இடத்தில் 500 ரூபாய் அபராதம் வசூலித்து வந்தனர். அந்த வரிசையில் ஒருவர் முக கவசம் அணியாமல் இருந்தால் அவரிடம் கேட்டதற்கு முகக் கவசம் அணிவது எனது சுதந்திரம் என்று கூறினார்.

அதற்கு காவல் துறையினர் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை காண்பித்து 500 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இருப்பினும் அந்த இடத்தில் சற்று சலசலப்பு உண்டானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top