Connect with us

இனிமேல் பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டேன்: கண்ணீருடன் கூறிய கே.எஸ்.அழகிரி

Tamil Nadu

இனிமேல் பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டேன்: கண்ணீருடன் கூறிய கே.எஸ்.அழகிரி

8e60e1fc0ae458c70093dc1f61e96773

சற்றுமுன் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இனிமேல் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டேன் என கே.எஸ்.அழகிரி கண்ணீருடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை கேட்டதாகவும் ஆனால் இருபதுக்கும் குறைவான தொகுதிகளை தருவதாக திமுக கூறுவதாகவும் செய்தி வெளிவந்ததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது

d6c72db96150c15beebf9c642a8abec7-1

இந்த நிலையில் இன்று கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் நாம் 15 ஆண்டுகளாக இருக்கிறோம். எனவே நமக்கு கௌரவமான தொகுதிகளை ஒதுக்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தொகுதி எண்ணிக்கை குறைவு என்பதை விட அவர்கள் நம்மை நடத்தும் விதம்…. என்று கூறி திடீரென கே.எஸ்.அழகிரி கண் கலங்கினார். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர் 

மேலும் இனிமேல் நான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்ல மாட்டேன் என்றும் நீங்களே சென்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துக் கொள்ளுங்கள் என்றும் கையெழுத்து போட மட்டும் நான் வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top