Connect with us

விஜயகாந்தை நேரில் சந்திப்பேன்: மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் பேட்டி!

Tamil Nadu

விஜயகாந்தை நேரில் சந்திப்பேன்: மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் பேட்டி!

89c47fcc28484190d4ae37e6938c6950

அதிமுக கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, சற்று முன்னர் அந்த கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

இதனை அடுத்து அந்த கட்சி எடுக்கும் அதிரடி முடிவு என்ன என்பதை அறிய தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். திமுக கூட்டணியில் ஏற்கனவே தொகுதி உடன்பாடு முடிந்து விட்டதால் அந்த கூட்டணிக்கு தேமுதிக செல்ல வாய்ப்பில்லை. எனவே மக்கள் நீதி மய்யம் அல்லது தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய இரண்டு வாய்ப்புகளும், தனித்துப் போட்டி என்ற ஒரு வாய்ப்புதான் தேமுதிகவுக்கு தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

2a26b850386a3bda19904c8c286efb78

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேச இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியுடன் தேமுதிக இணைய வேண்டும் என்று வலியுறுத்தவிருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் பொன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கூட்டணியுடன் இணையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top