மதுபானம் தரவில்லையென்றால் கொன்று விடுவேன்! அரிவாளை காட்டி மதுபானம் கொள்ளை!!

நம் தமிழ்நாட்டில் அதிகம் வியாபாரமாகும் தொழில் எதுவென்றால் அதனை மதுபானம் விற்பனை என்றே கூறலாம். அதன்படி நம் தமிழகத்தில் மது பிரியர்கள், மதுவிற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டாஸ்மாக்

இளைஞர்கள் மத்தியிலும் அதிகளவு மதுபானம் வலம் வருகிறது. மது அருந்தியவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் பிரச்சனை செய்வர், ஒரு சில நேரங்களில் இந்த பிரச்சனையானது கொலையில் கூட முடியும் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் அரிவாளை காட்டி மதுபானம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது.இந்த  சம்பவம் ராமநாதபுரம், சக்திபுரம் அருகே நடந்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்திபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையில் அரிவாளை காட்டி மதுபாட்டில்கள் கொள்ளையடித்தவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் இரண்டு பேர்கள் அரிவாளை காட்டி மதுபானம் கேட்டுள்ளனர்.

ஊழியர்கள் மதுபானம் தர மறுத்ததால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி மதுபானங்களை பறித்து சென்றனர். அரிவாளை காட்டி மிரட்டிய சத்தியநாதன்  என்பவரை போலீசார் கைது செய்தது, சத்தியநாதனோடு இருந்த கார்மேகம் என்பவரை போலீசார் தேடி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment