இதுக்கு சம்மதிச்சா தான் விஜயை இயக்குவேன்… பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்….!
எல்லா இயக்குனர்களாலும் காதல் கதையை சிறப்பாக வழங்கிட முடியாது. சிலரால் மட்டுமே அதை அவ்வளவு உணர்ச்சிகரமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் என்றால் அது கெளதம் மேனன் தான். இவர் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதுவரை கெளதம் மேனன் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான அஜித், சூர்யா, சிம்பு, மாதவன், விக்ரம் என பலரை வைத்து படம் இயக்கியுள்ளார் அதில் வெற்றியும் கண்டுள்ளார். ஆனால் இவர் இதுவரை நடிகர் விஜயை மட்டும் இயக்கியதே இல்லை. ஆனால் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் வெளியாக இருந்தது.
ஆம் விஜய் கௌதம் மேனன் கூட்டணியில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படம் அறிவிக்கப்பட்டு பாதியில் கைவிடப்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் இப்படம் மீதான எதிர்பார்ப்பும் உருவானது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் கெளதம் மேனன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “விஜய்யை வைத்து படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் இன்னும் ரெடியாகவில்லை. கதைக்கு விஜய் பொருத்தமாக இருந்தால் மட்டுமே அவரை வைத்து இயக்குவேன்.
என்னுடைய கதைக்குள் விஜய் வந்தால் தான் அவரை வைத்து கதையை இயக்குவேன். அவருக்காக கதையை நான் யோசித்து உருவாக்கினால் அது அவ்வளவு சிறப்பாக இருக்காது. இது விஜய்க்கும் நன்றாக தெரியும்” என கூறியுள்ளார். எது எப்படியோ சீக்கிரமே உங்க ரெண்டு பேரோட காம்போவில் ஒரு படத்தை பார்க்க நாங்க ஆவலா இருக்கோம் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
