இன்று காலை அதிமுக கட்சியில் பல பரபரப்பான தகவல் வெளியானது. அதன்படி அதிமுக கட்சியில் டிசம்பர் 7ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிவித்திருந்தனர்.
அதன் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செல்வி ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஒருசில தொண்டர்களால் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என்று அழைக்கின்றனர்.
தற்போது சசிகலா அதிமுகவின் சட்டவிதிகள் மாற்றப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், விரைவில் நிலை மாறும் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் கழகத்தையும் தொண்டர்களையும் காப்பதே என்று முதல் கடமை என்று சசிகலா அறிக்கையில் கூறியுள்ளார். அதிமுக தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான ஒரு இயக்கம் என்றும் சசிகலா அறிக்கையில் கூறியுள்ளார். அதிமுக தொண்டர்களின் இயக்கமாக மாற்றும் வரை உழைத்துக்கொண்டே இருப்பேன்; அதுவரை ஓய்ந்து விட மாட்டேன் என்று சசிகலா கூறியுள்ளார்.