மு.க.ஸ்டாலின் என்னும் நான் வெயிலிலும்,மழையிலும் குடையாக இருப்பேன்! தொண்டர்களுக்கு கடிதம்!!

தமிழக முதல்வர்  ஸ்டாலின் திமுக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் என்றும் மக்களுடன் இருந்து மாநிலத்தை காப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

மு க ஸ்டாலின்

தமிழ்நாட்டின் நீராதாரத்தை பெருக்குவதில் வடகிழக்குப் பருவ மழைக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்றும் தமிழில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பருவமழையின் பங்கு இந்த ஆண்டு மிக அதிகமாகி உபரி ஆகிவிட்டது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பருவமழைக்கு முன்பே வடிகால்களை சீரமைக்கும் பணிகளை அரசு நிர்வாகம் விரைவாக மேற்கொண்டது என்றும் கூறியுள்ளார். அணைகளும், நீர்த்தேக்கங்களும் தொடர்ந்து கண்காணித்து வந்தோம் என்றும் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை தொடர்ச்சியாக அதி கனமழை பெய்தது என்றும் கூறியுள்ளார். ஆனால் அதி கனமழை பெய்த போதிலும் 2015 போல் வெள்ள பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

அரசு இயந்திரம் 24*7 நேரமும் இயங்கும் வகையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தலைமையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்தே மக்களிடம் பேசும் வாய்ப்பினை பெற்று அவர்கள் நலன் காக்க ஆவன செய்தேன் என்றும் கூறினார்.

அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை நகரை வெள்ள பாதுகாப்பதில் பெரும் பங்காற்றினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை மட்டுமின்றி மழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் ஆய்வு மேற்கொண்டேன் என்றும் கூறினார்.

மழையால் டெல்டா மாவட்டங்களில் தளாடி-சம்பா பருவ நெல் பயிர்கள் நீரில் மூழ்கின என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். நீரில் மூழ்கிய பயிர்களை ஆய்வு செய்ய ஏழு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஸ்டாலின்

கனமழை  காலத்தை உணர்ந்து கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பத அளவை நிர்ணயிப்பதில் கவனம் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். வெள்ள நிவாரணப் பணிகளுக்காக டெல்டா பகுதி மக்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 13 லட்சம் ரூபாய் அளித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

பருவமழை காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு உறுதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கி நீர் ஆதாரங்களை பெருகுவதை அரசின் தலையாய நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

மு க ஸ்டாலின்

ஒவ்வொரு திட்டத்திலும் முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தும் களையப்படும் என்றும் கூறியுள்ளார்.மக்கள் கவனத்தை திசை திருப்ப முந்தைய ஆட்சியாளர்கள் கூறும் விமர்சனத்தை புறந்தள்ளி அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

மக்கள் பணியாற்றுவது ஒன்றே திமுக அரசின் இலக்காகும் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். பேரிடர் காலத்தில் மக்களை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதே அரசின் தலையாய கடமை என்றும் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

மழையிலும் வெயிலிலும் மக்களுக்குக் குடையாக திமுக அரசு திகழும் என்று உறுதி அளிக்கிறேன் என்றும் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment