News
எதிர் கேள்வி கேட்டால் நசுக்கி விடுவேன்: சீமான் அடாவடி பேச்சு
நான் அறிவிக்கும் வேட்பாளர் குறித்து என்னிடம் தொண்டர்கள் யாரும் எதிர் கேள்வி கேட்கக் கூடாது என்றும் அப்படி யாராவது கேட்டால் கிரிஸ்ட் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து நசுக்கி விடுவேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதை அடுத்து 35 தொகுதிகளுக்கு நேற்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வேட்பாளர்களை அறிவித்தார். இந்த நிலையில் இந்த வேட்பாளர் அறிவிப்பில் சில சலசலப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து நான் அறிவிக்கும் வேட்பாளர் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது என்றும் வேட்பாளர் அறிவிப்பு குறித்து யாரேனும் கேள்வி கேட்டால் மிதித்து நசுக்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார்
சீமானின் இந்த ஆவேச பேச்சால் நாம் தமிழர் கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு அரசியல் கட்சி தலைவர் இவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் பேசுவதா என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
