அவனுடைய கனவுகளை எப்பொழுதும் என் பிரார்த்தனைகளில் வைத்திருப்பேன்… அஸ்வினைப் பற்றி உருக்கமாக பேசிய புகழ்…

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் ஒருவர் அஸ்வின் குமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியின் 2015 ஆம் ஆண்டு உருவான ‘ரெட்டை வால் குருவி’ என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர் 2017 ஆம் ஆண்டு ‘நினைக்க தெரிந்த மனமே’ என்ற தொடரில் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாது பல குறும்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார். அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய ‘குக் வித் கோமாளி’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக மிகப்பெரிய பேரும் புகழும் அடைந்தார். இவருக்கு போட்டியில் கோமாளியாக சிவாங்கி வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து பண்ணின சேட்டைகள் அவ்வளவு ரசிக்கும் படியாக இருந்தது.

அஸ்வின்- சிவாங்கி ஜோடியை மக்கள் கொண்டாடினர். அந்த ஆண்டின் ட்ரெண்டிங் ஜோடியாக இவர்கள் இருந்தார்கள். பின்னர் 2022 ஆம் ஆண்டு ‘என்ன சொல்ல போகிறாய்’, ‘மீட் கியூட்’, ‘செம்பி’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்பு நல்லதொரு வாய்ப்புக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் அஸ்வின் குமார்.

அதே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டவர் தான் புகழ். இவருக்கும் அஸ்வினுக்கும் இடையே நல்லதொரு நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கூட குக் வித் கோமாளியில் கலாட்டா செய்துக் கொண்டிருப்பர். தற்போது தனது காமெடி மற்றும் வெள்ளந்தியான முகத்தினால் பிரபலமாகி படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் புகழ். இறுதியாக நடிகர் சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ திரைப்படத்தில் நடித்திருந்தார் புகழ். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் புகழ் தனது நண்பனான அஸ்வினை பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், அஸ்வினுக்குள் நல்ல திறமை இருக்கிறது, ஏனோ அவனுக்கு சரியான ஒரு வாய்ப்பு அமையவில்லை. சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல இடத்திற்கு வந்திடணும்னு போராடிட்டு கடுமையா உழைச்சிட்டு இருக்கான். அதுதான் அவன் கனவும் லட்சியமும் கூட. அவனோட கனவுகள் நிறைவேறணும் அப்டினு எப்போதும் அவனுக்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். என் பிரார்த்தனைகளில் கண்டிப்பாக அஸ்வின் இருப்பான் என்று பேசியுள்ளார் புகழ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...