40 திருமணங்கள் கூட செய்வேன், அது என்னுடைய விருப்பம்: வனிதா விஜயகுமார்

d8c2e03521a6ad62911d91b2047d6481

நான்கு அல்ல 40 திருமணம் கூட நான் செய்து கொள்வேன் என்றும் அது தன்னுடைய விருப்பம் என்றும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ள நிலையில் அவர் ஒரு இரும்பு மனிதர் என நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

வனிதா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘பிக்கப் அண்ட் டிராப்’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா ’தான் அரசியலுக்கு வருவேன் என்று தன்னுடைய ஜோசியர் தான் கூறினார் என்றும் ஆனால் அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தனது திருமணம் குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும், அது என்னுடைய விருப்பம், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கவும் எனக்கு தைரியம் இருக்கிறது என்றும், என்னுடைய வாழ்வை நான்தான் தீர்மானம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு நான் அச்சப்பட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் வனிதாவை தொடர்ந்து பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், வனிதா பல அவமானங்களையும் துன்பங்களையும் கடந்து வந்த இரும்பு மனிதர் என்றும், வாழ்க்கையில் அவர் ரொம்ப கஷ்டப்பட்டு ரொம்ப அவமானப்பட்டு இந்த இடத்தை பிடித்துள்ளார் என்றும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் கேள்வி கேட்க கூடாது அது அவர்களுடைய சுதந்திரம் என்றும் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.