Connect with us

அந்த நடிகையுடன் நெருங்கி நடித்ததால் விவாகரத்து வரை சென்றேன்…. பிரபல நடிகர் பகீர் பேட்டி….!

விஜய் சேதுபதி

பொழுதுபோக்கு

அந்த நடிகையுடன் நெருங்கி நடித்ததால் விவாகரத்து வரை சென்றேன்…. பிரபல நடிகர் பகீர் பேட்டி….!

அந்த நடிகையுடன் நெருங்கி நடித்ததால் விவாகரத்து வரை சென்றேன்…. பிரபல நடிகர் பகீர் பேட்டி….!

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அதில் நடிக்கும் நடிகர்கள் நடிக்கிறார்கள் அது வெறும் நடிப்பு என்று சினிமாவின் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நிறைய பேர் உள்ளனர். உதாரணமாக ஒரு படத்தில் வில்லனை பார்த்துவிட்டு அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் என நினைத்து அவரை திட்டுவார்கள் அல்லவா? அந்த மாதிரி பல நடிகர்கள் விமர்சனங்களை சந்தித்துள்ளனர்.

அவ்வளவு ஏன் பல நடிகர்களின் சொந்த வாழ்க்கையில் சினிமா ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை அதுதான். ஏனெனில் சினிமா நடிப்பு என்பது ஒரு கலை. அதில் நடிப்பிற்காக சக நடிகையை காதலிக்க வேண்டும், அவருடன் நெருக்கம் காட்ட வேண்டும்.

நம் நிஜ வாழ்க்கையில் நமக்கு என்னென்ன உணர்ச்சிகள் உள்ளதோ அது அத்தனையையும் நாம் திரையில் காட்ட வேண்டும். அப்போது தான் அந்த நடிப்பில் உயிர் இருக்கும். அப்படி தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

மிக குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட விஜய் சேதுபதி நடிக்க வந்த ஆரம்பத்தில் சினிமாவால் அவர் சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்தித்துள்ளாராம். அதன்படி அவரின் முதல் படத்தில் நாயகியுடன் நெருங்கி நடித்ததால், விஜய் சேதுபதியின் மனைவி மிகப்பெரிய சண்டை போட்டாராம்.

அந்த வாக்குவாதம் விவாகரத்து வரை செல்லும் அளவிற்கு முற்றி விட்டதாம். ஆனால் அப்போதும் கூட சினிமாவை ஒரு போதும் தன்னால் விட முடியாது என விஜய் சேதுபதி திட்டவட்டமாக கூறிவிட்டாராம். அதன் பின்னர் அவர் மனைவி சினிமாவின் எதார்த்தத்தை புரிந்து கொண்டாராம். தற்போது சினிமா பழகி விட்டது என விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top