ஜெய்பீம் படம் பார்த்தேன்; என்னையவே அழ வச்சிட்டு! கமலின் உருக்கமான ட்விட்!!

கமல்

தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று மக்களிடையே நடிப்பின் நாயகன் என்ற பெயரை பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் இன்றைய தினம் வெளியான படம் ஜெய்பீம். இந்த படத்தினை ஞானவேல் இயக்குனர் இயக்கியுள்ளார்.கமல்

இந்த படம் இன்றைய தினம் ஓடிடியில் வெளியானது. இதன் ஓடிடி உரிமத்தை அமேசன் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கும் பலரும் நல்ல விதமான கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் இப்படத்தினை பற்றி டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதன்படி ஜெய்பீம் படம் பார்த்தேன், கண்கள் குளமாகின என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ட்விட்டரில் கூறியுள்ளார்.

பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார். பொது சமூகத்தின் மனசாட்சிக்கு குரலற்றவர்களின் குரல் வளை கொண்டு சேர்த்துள்ளார் நடிகர் சூர்யா என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் பட குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print