இந்தப் பாடலில் நடனம் ஆட எதிர்ப்பு வந்தது… அதை மீறி தான் ஆடினேன்… சமந்தா பகிர்வு…

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹால் போன்ற நகை கடை விளம்பரங்களில் நடிகையாக நடித்தார்.

2007 ஆம் ஆண்டு ‘மாஸ்கோவின் காவிரி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

2012 ஆம் ஆண்டு ஜீவாவுடன் இணைந்து ‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று சமந்தா புகழடைந்தார். பின்னர் ‘கத்தி’, ‘தங்கமகன்’ போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார் சமந்தா.

தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார் சமந்தா. இப்பாடல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட்டானது. தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜூனா அவர்களின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார் சமந்தா. ஆட்டோ இம்மியூன் டிசார்டர் நோயினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா.

தற்போது, ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட சமந்தா, ‘புஷ்பா’ திரைப்படத்தில் நடனமாடிய பாடல் பற்றிய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், ‘புஷ்பா’ பட பாடலில் முதலில் நடனம் ஆடுவதற்கு என் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடம் இருந்தும் பயங்கர எதிர்ப்பு வந்தது. ஏனென்றால் அப்போது தான் என்னுடைய விவாகரத்தை அறிவிப்பதாக இருந்தது. அந்நேரத்தில் இந்த பாடலில் நடனம் ஆடினால் சரியாக இருக்காது என்று அறிவுறுத்தினார்கள். ஆனாலும், அந்த எதிர்ப்பை எல்லாம் மீறி தான் ‘புஷ்பா பட பாடலில் ஆடினேன் என்று கூறியுள்ளார் சமந்தா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...