Connect with us

நான் 5 வயதில் பார்த்த மதுரை இன்னும் வளர்ச்சி அடையவில்லை-கமலஹாசன்;

kamalhassan

தமிழகம்

நான் 5 வயதில் பார்த்த மதுரை இன்னும் வளர்ச்சி அடையவில்லை-கமலஹாசன்;

நான் 5 வயதில் பார்த்த மதுரை இன்னும் வளர்ச்சி அடையவில்லை-கமலஹாசன்;

ஒவ்வொரு நடிகருக்கும் ஒருகாலத்தில் கட்டத்திற்கு பின்பு ரசிகர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். ஏனென்றால் அந்த நடிகருக்கு உடல் அமைப்பும், முகத்தோற்றமும் வயதானது போல் மாறி விடும். ஆனால் தான் களத்தூர் கண்ணம்மாவில் நடித்த போது இருந்த குழந்தை முகத்தோடே தற்போது வரையிலும் இருக்கும் நடிகராக வலம் வருகிறார் உலகநாயகன் கமலஹாசன்.

அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினை நிறுவி போட்டியிட்டார். எதிர்பாரதவிதமாக மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

அதோடு மட்டுமில்லாமல் கட்சியிலுள்ள பல முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக கலைந்தனர். இருப்பினும் கமலஹாசன் சோர்வுறாது தனது பணியில் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில் மாவட்ட ரீதியாக வேட்பாளர் பட்டியலையும் சில நாட்களுக்கு முன்பு கமலஹாசன் வெளியிட்டார்.

நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மதுரையினை பற்றி மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கூறியுள்ளது அங்குள்ள மக்களை யோசிக்க வைப்பதாக காணப்படுகிறது.

அதன்படி மதுரை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்று அவர் கூறியுள்ளார். ரூபாய் 500 கோடியில் மதுரையில் வளர்ச்சித் திட்டங்கள் செய்ததாக கூறுவதை நேரில் பார்க்க முடிகிறதா? என்ற கேள்வியையும் உலகநாயகன் கமலஹாசன் கேட்டுள்ளார். நான் ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது இருந்த மதுரையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கமலஹாசன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top