என்னை நம்பிய என் கேப்டனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்-ஜடேஜா

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டால் அந்த நாடுகள் நிச்சயமாக தோல்வியை சந்திக்கும் என்பது வரலாற்றில் காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த சுற்றுப்பயணத்தின்போது மேற்கத்திய அணியை ஒரு போட்டியிலும் வெற்றி பெற விடாமல் இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக மூன்று 20 ஓவர் போட்டிகள் நடைபெற்றது. இந்த மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் இந்தியா 3 க்கு 0 என்ற கணக்கில் அனைத்துப் போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியின்போது அதிரடி ஆட்டம் காட்டிய ஆல் ரவுண்டர் ஜடேஜா கேப்டனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக கூறியுள்ளார். அதன்படி இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜடேஜா,  நம்பிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

என் மீது நம்பிக்கை வைத்து நாட்டிற்காக ஜடேஜா அதிக ரன்களை குவிப்பார் என்று நம்பிய ரோஹித் சர்மாவுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.