பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலின் வாக்கெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷெரீப் நேற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஷெபாஸ் ஷெரீப் இன்று பிரதமராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் இந்தியாவுடன் நல்லுறவு பேண விரும்புவதாக ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். 22 கோடி பாகிஸ்தான் மக்களை இறைவன் காப்பாற்றியதாக கூறினார்.
பாகிஸ்தான் மக்கள் இந்நிகழ்வை திருவிழாவாகக் கொண்டாடுவார்கள் என்றும் இந்தியாவுடன் நல்லுறவு பேண விரும்புவதாகவும் ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீரும் வகையில் அது நிகழாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அனைத்து சர்வதேச நாடுகளிலும் காஷ்மீர் பிரச்சனை குறித்து முழக்கம் எழுப்புவோம் என கூறியுள்ளார். இரண்டு நாடுகளும்மே வறுமை அதிகமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள மோடிக்கு அறிவுரை வழங்குவதாக கூறியுள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முன் வருமாறு மோடிக்கு அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.