Connect with us

அன்றைக்கே நினைத்தேன்!! ஓபிஎஸ் மூலமாகவே உண்மை வெளிவந்து விட்டது!!

சசிகலா ஒபிஎஸ்

Tamil Nadu

அன்றைக்கே நினைத்தேன்!! ஓபிஎஸ் மூலமாகவே உண்மை வெளிவந்து விட்டது!!

அன்றைக்கே நினைத்தேன்!! ஓபிஎஸ் மூலமாகவே உண்மை வெளிவந்து விட்டது!!

கடந்த இரண்டு தினங்களாகவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். ஏனென்றால் அவரிடம் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தில் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

முதல் நாளில் சுமார் எழுபத்தி இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. மொத்தமாக அவரிடம் 90க்கு மேற்பட்ட கேள்விகள் கடந்த இரண்டு நாள் விசாரணையில் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இதில் அவர் கூறிய பதில்கள் அனைத்தும் சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தது போல காணப்பட்டது. இதனால் அதிமுகவின் வட்டாரங்கள் ஓரளவிற்கு மகிழ்ச்சியில் காணப்பட்டனர். அதோடு மட்டுமல்லாமல் பலருக்கும் பன்னீர்செல்வத்தின் பதில் அனைத்தும் ஆச்சரியத்தையும் கொடுத்தது.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் பதில் குறித்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா கருத்து கூறியுள்ளார். அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் உண்மையை பேசியுள்ளார் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த உண்மைகள் ஓ.பன்னீர்செல்வம் மூலமாக மக்களுக்கு தெரிய வந்துள்ளது என்று சசிகலா கூறியுள்ளார். மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைத்தது சரிதான் என்று அன்றைக்கே நினைத்தேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top