நான் என்னை பெரிய பெண்ணாக நினைக்கிறேன்… ஆனாலும் இப்படி பண்றாங்க… பேபி யுவினா பேச்சு…

பேபி யுவினா பார்த்தவி 2011 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘உறவுக்கு கை கொடுப்போம்’ என்ற தொடரின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

வீரம் திரைப்படத்தில் முக்கியமான சண்டை காட்சியில் தோன்றியிருப்பார் பேபி யுவினா. அத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் யுவினா இணைந்து நடிக்கும் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. மேலும் வீரம் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. வணீக ரீதியாகவும் வசூல் சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து ‘மஞ்சப்பை’, ‘அதிதி’, ‘மேகா’, ‘கத்தி’, ‘சர்க்கார்’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர். யுவினா குழந்தை நட்சத்திரமாக நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டானது தான்.

இப்போது வளர்ந்து குமரி ஆகியுள்ளார் யுவினா. நல்ல பட வாய்ப்பிற்காக காத்திருந்த யுவினா சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியின் மகளாக நடித்திருந்தார். யுவினாவின் நடிப்பிற்கு நல்ல விமர்சனமும் பாராட்டும் கிடைத்தது.

சிறு வயதில் கியூட்டாக இருப்பார் நவீனா. தற்போது அழகான பெண்ணாக வளர்ந்துள்ளார். இருந்தாலும் மக்கள் செய்யும் ஒரு விஷயத்தைப் பற்றி சற்று வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார் யுவினா. அவர் கூறியது என்னவென்றால், பத்து வருடத்திற்கு முன்பு குழந்தையாக நடித்துள்ளேன், இப்போது நான் வளர்ந்து விட்டேன், ஆனாலும் இன்னும் மக்கள் என்னை பேபின்னு கூப்பிட்றாங்க என்று கூறியுள்ளார் பேபி யுவினா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...