சினிமாவிற்கு வந்த புதுசுல இப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன்… SJ சூர்யா எமோஷனல்…

திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் SJ சூர்யா. இவரது இயற்பெயர் ஜஸ்டின் செல்வராஜ் பாண்டியன் என்பதாகும். இவர் தமிழ் சினிமாவின் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் மற்றும் நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர்.

ஆரம்பத்தில் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் ‘ஆசை'( 1995), ‘சுந்தர புருஷன்’ (1996), ‘உல்லாசம்’ (1997) ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு ‘வாலி’ திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்தில் அஜித், சிம்ரன் நாயகன் நாயகியாக நடித்திருந்தனர். முதல் படமே வேற்றி படமாக SJ சூர்யா அவர்களுக்கு அமைந்தது. அஜித் அவர்களுக்கும் ‘வாலி’ படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் நடிகை ஜோதிகாவை SJ சூர்யா அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ‘குஷி’, ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’, ‘இசை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இது தவிர பாடலாசிரியரும், பாடகராகவும் திரையுலகில் பிரபலமானவர். தற்போது நடிப்பில் கவனம் செலுத்திய SJ சூர்யா, தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பு அரக்கன் என்று பெயர் பெற்றுள்ளர்.

ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட SJ சூர்யா, சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், சொந்த ஊரில் நல்ல வசதியாக வளர்ந்த நான், சினிமாவிற்கு வந்த புதுசுல, நல்ல சாப்பாடும், மாத்து துணியும் கூட இல்லாமல் கஷ்டப்பட்டேன் என்று எமோஷனலாக பேசியுள்ளார் SJ சூர்யா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...