Connect with us

அந்த நடிகரை எனக்கு ரொம்ப பிடிக்கும்: நடிகை சமந்தாஓப்பன் டாக் !!

samantha 1280 1

Entertainment

அந்த நடிகரை எனக்கு ரொம்ப பிடிக்கும்: நடிகை சமந்தாஓப்பன் டாக் !!

அந்த நடிகரை எனக்கு ரொம்ப பிடிக்கும்: நடிகை சமந்தாஓப்பன் டாக் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவராக நாக சைதன்யாவை விவாகரத்துச் செய்தவுடன் சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் வந்தன.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத சமந்தா ஹாலிவுட், பாலிவுட்டில் களமிறங்கி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு சூர்யா என்றால் ரொம்ப பிடிக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

நான் 11- ஆம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக பார்த்த திரைப்படம்  காக்க காக்க. அதன் பிறகு தான் நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்ததாகவும் எனது கல்லூரி வாழ்கையில் சூர்யாவை நேரில் பார்க்க முடியுமா என நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

நான் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்கும் போது கடைசி இடத்தில் தான் அமர்ந்து இருப்பேன் . ஆனால் ஒரு முறை நடிகர் சூர்யா கலை நிகழ்ச்சிகாக கல்லூரிக்கு வந்ததால் அன்றைய தினம் முதல் இடத்தில் அமர்ந்து சூர்யா சூர்யா என கூச்சலிட்டதாக கூறினார்.

அப்போது யாராவது என்னிடம் நீ சூர்யாவோடு நடிக்க போகிறார் என கூறினால் நான் சத்தியமாக நம்பியிருக்க மாட்டேன். இப்போது நான் அஞ்சான், 24 உள்ளிட்ட படங்களில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்ததாகவும், அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் என்னுடைய சொந்த குரளில் பேசியதால் தமிழ் எனது சொந்த மொழி என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top