”இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் ஜெயலலிதாவை சந்தித்தேன்” – அப்பலோ மருத்துவர் வாக்குமூலம்!!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இருவர் மறுவிசாரணைக்கு ஆஜராகி தக்களது தரப்பு வழக்குகளை முன்வைத்தனர். இதுவரையில் 150 க்கும் அதிகமானோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குறிப்பாக ஜெ. உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்களை தொடர்ந்து ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பினரிடம் விசாரணையினை சமீபத்தில் நிறைவு செய்தனர்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்களிடம் மறு விசாரணை தொடங்கியுள்ளது. அந்த வகையில் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தியதால் அப்பல்லோ மருத்துவர்கள் 11 நபர்களிடம் மறுவிசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.
அதன் படி, இன்று நரசிம்மன், பால் ரமேஷ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜர் ஆகி இருந்தனர். இதில் மறைந்த முன்னாள் முதலமைச்சருக்கு மருத்துவ நெறிமுறைகள் படி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது செப். 29, 30, அக் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவிகள் பொருத்தப்பட வேண்டுமா என்று ஆலோசிக்கப்பட்டதாகவும், ஜெயலலிதா அவர்கள் இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் ஜெயலலிதாவை சந்தித்தாக அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
