இதற்கு நான் செத்தே இருக்கலாம்..! யாஷிகா ஆனந்த்..?
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்றார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் யாஷிக்கா அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடி வருகிறார். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர் நீங்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கு என்னவாயிற்று, உங்களுடைய தோழியை கொன்ற பிறகு எப்படி உணருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு பதிலளித்த யாஷிகா நான் குடித்துவிட்டு ஏற்பட்ட விபத்து இல்லை என்றும் நான் சுயநினைவோடு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், நான் குடிக்கவில்லை என்ற ஒரு ரிப்போட் கூட வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், உண்மையான தகவல்கள் இல்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் இந்த எலும்பு முறிவு ஏற்படாமல் நான் போய் சேர்ந்திருந்தாலலே நன்றாக இருந்திருக்கும் என வருத்ததுடன் பதில் அளித்து சிறிது நேரத்திலேயே தன்னுடைய பதிவை நீக்கியுள்ளார் யாஷிகா.
