நேற்றைய தினம் தமிழகத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கடந்த ஐந்து இடங்களில் போட்டியிட்ட முக்கியமான போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.
இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உலகநாயகன் கமலஹாசன் தொடர்கிறார். இந்த நிலையில் இன்று காலை ஆரம்பமே அட்டகாசம் போல பிக்பாஸ் அல்டிமேட் காணப்பட்டது.
ஏனென்றால் வந்த முதல் நாளிலேயே நாமினேசன் ப்ராசஸை பிக்பாஸ் தொடங்கிவிட்டது. இதில் ஒவ்வொரு பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேட் செய்தார்கள்.
இந்த நிலையில் மற்றொரு புரோமோ பிக்பாஸ் குடும்பத்தில் சலசலப்பு உண்டாகி உள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் சீசன் 3- ஐ ஓரு வழி பண்ண வனிதா மீண்டும் தனது ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார்.
அதன்படி பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுக்க அதை தான், உலகத்துக்கே தெரியும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார். அதோடு இந்த விளையாட்டில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்று போட்டியாளர்கள் மத்தியில் இருந்து விலகுகிறார் வனிதா விஜயகுமார்.