விஜய்யிடம் இருந்து தான் இதை கற்று கொண்டேன்… பிரபல பாலிவுட் நடிகை புகழாரம்….!
பல விமர்சனங்களை தாண்டி தனது திறமையால் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தான் நடிகர் விஜய். என்னதான் திரையில் மாஸ் நடிகராக பந்தா காட்டினாலும் நிஜ வாழ்க்கையிலும் விஜய் மிகவும் எளிமையான மனிதர். அதுமட்டும் இன்றி இவரின் நற்குணங்கள் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ரசிகர்களை தாண்டி பல திரைபிரலங்களுக்கும் விருப்பமான நடிகர் என்றால் அது விஜய் தான். ஏனெனில் அந்த அளவிற்கு இவரது எளிமையும், தன்னடக்கமும் மற்றவர்களுக்கு பிடிக்கும். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் நடிகர் விஜய் குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.
அவர் வேறு யாருமல்ல தமிழன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தான். அவர் விஜய்யுடன் இணைந்து தமிழன் என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ் சினிமா பக்கம் அவர் எட்டி கூட பார்க்கவில்லை. முழுக்க முழுக்க பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். இந்நிலையில் தமிழன் படத்தின் போது நடிகர் விஜய்யிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட பழக்கம் ஒன்றை தற்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தங்களின் காட்சி முடிந்தால் நடிகர்கள் கேராவேனில் சென்று ஓய்வெடுப்பார்கள். ஆனால் விஜய் அவரின் காட்சி முடிந்தால் கூட கேரவேன் பக்கம் போகாமல் செட்டிலேயே அமர்ந்து ஏதாவது ஒன்றை கற்று கொள்ள முயற்சி செய்வார்.
அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன். படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவேனுக்கு செல்வேன். மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதையாவது தெரிந்து கொள்வதற்காக சுற்றி கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார்.
