மக்கள் மகிழ்ச்சி; குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தேன்!:முதல்வர்;

அக்டோபர் மாத கடைசி வாரத்தில் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது. இந்த வடகிழக்கு பருவ மழையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழைநீர் கொட்டி தீர்க்கிறது.

ஸ்டாலின்

குறிப்பாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் அடுத்தடுத்து தொடர் மழை காரணமாக அங்குள்ள பெரும்பாலான நகரங்கள் மழை நீரில் மூழ்கின. இதனை நம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், வீடுகள் போன்றவற்றை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேலாக நேரில் சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து மக்களின் குறைகளை தீர்த்தார்.

இந்த நிலையில் இது குறித்து தற்போது சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி மக்கள் கூறிய அனைத்து குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருந்தேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை செம்மஞ்சேரியில் மக்கள் என்னிடம் தெரிவித்த அனைத்து குறைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் குடிநீர், பால், உணவு என அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மழை வெள்ள நீரும் அகற்றப்பட்டது இன்று என்னிடம் மக்கள் தெரிவித்துள்ளனர் என்று மகிழ்ச்சியோடு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment