விஜய் அஜித் இருவரை ஒரே படத்தில் நடிக்க வைக்க எங்கிட்ட கதை இருந்துச்சு… ஆனால் இந்த காரணத்தால் எடுக்கவில்லை… ஏ. எல். விஜய் பகிர்வு…

சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஏ. எல். விஜய். இவரது தந்தை ஏ. எல். அழகப்பன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். அழகப்பன் ஈசன் போன்ற சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் தோன்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களை இயக்குவதற்கு முன்பு ஏ. எல். விஜய் மும்பையை சேர்ந்த வீனஸ் புரொடெக்ஷன்ஸ் என்ற பேனரின் கீழ் 100 க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை எடுத்து வெற்றிகரமான தயாரிப்பாளராக திகழ்ந்தார். பின்னர் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களுடன் உதவி இயக்குனராக பணிபுரிந்ததன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினர்.

2007 ஆம் ஆண்டு அஜித் மற்றும் த்ரிஷாவை வைத்து ‘கிரீடம்’ படத்தை இயக்கியதன் வாயிலாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு ‘மதராசபட்டினம்’ படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார் ஏ. எல். விஜய்.

2011 ஆம் ஆண்டு ‘தெய்வத்திருமகள்’, 2012 ஆம் ஆண்டு ‘தாண்டவம்’, 2013 ஆம் ஆண்டு ‘தலைவா’, 2014 இல் ‘சைவம்’, 2017 இல் ‘வனமகன்’, போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஏ. எல். விஜய். திரைப்படங்களை ரியலிஸ்டிக் ஆக எடுப்பதில் வல்லவர் ஏ. எல். விஜய்.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஏ. எல். விஜய், என்னிடம் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க என்னிடம் கதை இருந்தது. ‘தலைவா’ பட ஷூட்டிங் போது விஜயிடம் இதைப்பற்றி பேசினேன். அவர் அஜித் ஓகே சொன்னால் எனக்கும் ஓகே தான் என்று கூறினார். பின்னர் நான் யோசிக்கையில் இது பிராக்டிகலாக நிறைய பிரச்சனைகள் வரும் என்பதால் அதை அப்படியே எடுக்காமல் விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார் ஏ. எல். விஜய்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews