News
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது: தேவைப்பட்டால் பாஜக நடத்தட்டும்!

மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றும் தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் தேவைப்பட்டால் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதன் பெரும்பான்மையை நிரூபிக்கும் என்றும் செய்தியாளர்களிடம் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்
ஆளுநரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்காமல் கமல்நாத் இவ்வாறு பேசுவது சட்டத்திற்கு புறம்பானது என்று பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
