எனக்கு கவர்ச்சி செட் ஆகாது.. பிரியா பவானி சங்கர் ஓப்பன் டாக்!!

பிரியா பவானி சங்கர்  புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, தமிழக இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்காகவே செய்தி பார்த்தவர்கள் எல்லாம் உண்டு. அதுபோக தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்த இவருக்கு, விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியலில் பிரபலமான இவருக்கு இல்லத்தரசிகள் முதல் அனைவரும் ரசிகர்களே. சீரியலில் பிரபலமான இவருக்கு மேயாத மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

06c3dbde22bdae2b1031345ca459b2eb

முதல் படமே மிகவும் பிரபலமானதை அடுத்து, கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்., தற்போது இவர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, பொம்மை, இந்தியன் படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியாக நடிப்பது குறித்து சமீபத்தைய பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது பிரியா பவானி சங்கர் கூறியதாவது, “என் முகத்துக்கு கவர்ச்சி செட் ஆகாது. மேலும் எனக்கு அவ்வாறு நடிப்பதில் உடன்பாடில்லை. நிச்சயம் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். அதுபோல் ஏற்கனவே வந்த கதாபாத்திரங்களையும் மறுத்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.