தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை டாப்சி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற படங்களில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால், வெப் சீரியஸ் மற்றும் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் ஊடகங்களில் கேள்விகளுக்கு ஏடாகூடமான பதில் அளிப்பதால் பல பேர் திமிர் பிடித்தவல் என விமர்சனம் செய்கின்றனர்.
அதே சமயம் இவருக்கு எதிராக சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட கருத்துக்களும் வருவது உண்டு. இது குறித்து பேட்டி ஒன்றில் சிலர் கேமராவுக்கு முன்னால் நடிப்பது போல் எனக்கு நடிக்க தெரியாது என வேதனை தெரிவித்துள்ளார்.
என்னை நிறைய பேர் விமர்சனம் செய்தாலும் நான் எப்போதும் நேர்மையாக இருப்பேன் என தெரிவித்துள்ளார். அதே சமயம் பலபேர் தொடர்ந்து நெகட்டிவ் கமெண்ட் செய்வதால் சமூக வலைத்தளத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சோசியல் மீடியாவில் போய் தேடக்கூடாது என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். நடிகை டாப்சியின் இத்தகைய பதிவிற்கு நெட்டிசன்கள் பலவித கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.