நான் ஓய்வெடுக்க விரும்பவில்லை; நிச்சயமாக விளையாடுவேன்!: கோலி விளக்கம்;

கிரிக்கெட்டில் மகுடம் சூடா மன்னனாக சுற்றித் திரிகிறார் கேப்டன் கோலி. ஏனென்றால் அவர் இதுவரை ஐசிசி தொடரில் எந்த ஒரு வேர்ல்ட் கப் பையும் இந்தியாவுக்குப் பெற்றுத் தரவில்லை என்பது சோகமான உண்மையாகும். அதோடு ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்று விடவில்லை என்பது வருத்தத்துக்குரியது காணப்படுகிறது.

விராட் கோலி

இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இனி கேப்டனாக தொடர மாட்டார் என்று அவரே கூறி இருந்தார். அதோடு 20 ஓவர் போட்டிகளிலும் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் நடக்க இருக்கின்ற தென்னாபிரிக்காவுடனான சுற்றுப்பயணத்தில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியுள்ளார். அதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். ஓய்வெடுக்க ஒருபோதும் நான் விரும்பியதில்லை என்று விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். ஒருநாள் தொடரின் கேப்டன் பொறுப்பிலிருந்து நான் விடுவிக்கப்பட்டதாக தேர்வுக்குழுவினர் கூறினர் என்றும் கோலி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment