தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பணங்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அதோடு மூன்று பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணங்களை ராஜேந்திரபாலாஜி மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடுவதற்கு மூன்று தனிப்படைகள் நேற்றையதினம் அமைக்கப்பட்டன.
இன்று காலை அவரது சகோதரியின் மகன்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் கூறியுள்ளார். அதன்படி அவரிடம் செய்தியாளர்கள் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைவருக்கு பற்றி கேள்வி கேட்டனர்.
அதற்கு ராஜேந்திர பாலாஜி பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறினார். அதோடு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழகத்தில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைப்பது அரசின் கடமை என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.