நான் BJP கிடையாது; குறை பிரசவ பேச்சு.. மன்னிப்பு கோரிய பாக்யராஜ்!

பிரதமர் மோடியின் ஆட்சியில் செயல்படுத்திய நலத்திட்டங்கள் பற்றி எழுதப்பட்ட ‘பாரதப் பிரதமரின் மக்கள் நலத் திட்டங்கள் புதிய இந்தியா-2022′ என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மோடியை  போன்ற நபர்கள் இந்தியாவிற்கு தேவைப்படுவதாகவும் அவரை குறைசொல்பவர்கள் ’குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்’ என தெரிவித்தார்.

பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதால் அவரை விமர்சிப்பதற்கு நிறைய பேர் உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இளையராஜா கூறியது போல தற்போது பாக்யராஜ் கூறியதால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு நிலவியது.

இதற்கிடையே குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள்’ என கூறியது மற்றவர்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் மன்னிந்து விடுங்கள் என  பாக்யராஜ் கூறினார். நான் BJP கிடையாது என்றும் நான் தமிழன் என கூறினார்.

மேலும், திராவிட தலைவர்களைப் பார்த்து வளர்ந்தவன் என்பதால் அதன் அடிப்படையில் கூறியதாக இயக்குனர்  பாக்யராஜ்  தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment