மதுப் பழக்கம் வரக்கூடாது அப்டிங்கிறதுக்காக இதைச் செஞ்சேன்… MS பாஸ்கர் பகிர்வு…

பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள முத்துப்பேட்டையை சேர்ந்த MS பாஸ்கர் நாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது முழுப் பெயரான முத்துப்பேட்டை சோமு பாஸ்கர் என்பதை சினிமாவிற்காக எம். எஸ். பாஸ்கர் என்று சுருக்கி வைத்துக்கொண்டார்.

MS பாஸ்கர் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர், துணை மற்றும் குணச்சித்திர நடிகர் மற்றும் டப்பிங் கலைஞரும் ஆவார். ஒரு நாடக கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் MS பாஸ்கர். தமிழகத்தில் நவீன நாடகங்களை நிகழ்த்திய ‘புதிய நாடகத்திற்கான சங்கம்’ என்ற தமிழ் நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தவர் MS பாஸ்கர்.

ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் பணியாற்றினார். அதே நேரத்தில் சின்னத்திரை தொலைக்காட்சி தொடரிலும் நடித்து பிரபலமானார். சன் டிவியின் பிரபல தொடரான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் பட்டாபி கதாபாத்திரத்தில் நடித்து புகழடைந்தவர். இவரை பட்டாபி என்று இன்றும் கூட கூப்பிடுபவர்கள் உண்டு. அப்படி ஒரு தாக்கத்தை பட்டாபி கதாபாத்திரம் மூலம் ஏற்படுத்தியவர் MS பாஸ்கர்.

1987 ஆம் ஆண்டு ‘திருமதி ஒரு வெகுமதி’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 90 களில் வந்த படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த MS பாஸ்கர் 2000 களின் ஆரம்பத்தில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.

‘திருப்பாச்சி’, ‘தமிழன்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தசாவதாரம்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் MS பாஸ்கர். தற்போது இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘பார்க்கிங்’ படம் வெற்றிப் பெற்றது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதையும் MS பாஸ்கர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட MS பாஸ்கர், வாழக்கை அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் மது குடிக்க மாட்டேன், மது பழக்கம் வர கூடாது என்பதற்காக நான் டிரைவர் வைக்கவில்லை, என் காரை அன்று முதல் இன்று வரை நான் தான் ஓட்டுவேன். பார்ட்டிகளுக்கு போனால் கூட நானே கார் ஓட்டுவதால் என்னை குடிக்க சொல்ல மாட்டாங்க. அது மட்மல்லாமல் கார் டிரைவிங் எனக்கு ரொம்ப பிடிக்கும. டிரைவிங் தான் எனக்கு போதை என்று கூறியுள்ளார் MS பாஸ்கர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...