இமான் இந்தப் பாட்டை கம்போஸ் பண்ணும் போதே அழுதுட்டேன்… இயக்குனர் பாண்டிராஜ் பகிர்வு…

இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரான பாண்டிராஜ் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். படிப்பை முடித்துவிட்டு 1996 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் அலுவலக பணியாற்றும் பையனாக வேலைக்கு சேர்ந்தார்.

வேலை செய்துக் கொண்டே சிறுகதைககளையும் எழுதினார் பாண்டிராஜ். பின்னர் படம் இயக்குவதில் ஆர்வம் கொண்ட பாண்டிராஜ் சேரன் அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பின்பு இயக்குனர் தங்கர் பச்சான் மற்றும் சிம்பு தேவன் ஆகியோருடன் இணைந்து ஆறு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

2009 ஆம் ஆண்டு சசிகுமார் தயாரிப்பில் ‘பசங்க’ திரைப்படத்தை இயக்கினார் பாண்டிராஜ். விமல் மற்றும் குழந்தைகளை வைத்து இயக்கிய இப்படம் வெற்றிப் பெற்று மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. அடுத்து 2012 ஆம் ஆண்டு பசங்க ப்ரொடெக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார்.

தனது முதல் தயாரிப்பில் உருவான ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை நாயகனாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்த தயாரிப்பான ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தில் மறுபடியும் விமல் மற்றும் சிவகார்த்திகேயனை நடிக்கவைத்தார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

தொடர்ந்து ‘கோலி சோடா’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’, ‘பசங்க 2’, ‘எதற்க்கும் துணிந்தவன்’, போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார் பாண்டிராஜ். குடும்ப பாங்கான கதை களத்தை தேர்வு செய்து எடுப்பதில் பாண்டிராஜ் வல்லவர். இவரது படங்கள் பெரும்பாலும் வணீக ரீதியாக வசூல் படைத்தது.

தற்போது நடந்த நேர்காணலில் சினிமாவில் தனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் தந்தையைப் பற்றி ஒரு பாடல் வேண்டும் என்று இம்மானிடம் கூறினேன். அவர் ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ பாடலை அருமையாக உணர்ச்சிகரமாக உருவாக்கி இருந்தார். அந்தப் பாடலை கம்போஸ் செய்யும் போதே நான் அழுதுவிட்டேன் என்று பகிர்ந்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...