பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் பிரம்மாண்டமான மேடையில் ஆரி வின்னர் என்றும் பாலாஜி ரன்னர் என்றும் கமல்ஹாசன் அறிவித்தார்
ஆரி வின்னர் என்று கமல்ஹாசன் அறிவுத்தவுடன் பாலாஜி அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு எனது அண்ணனுக்கு வாழ்த்துக்கள் என்று கூறினார். மேலும் அவர் உருக்கமாக பேசிய போது ’பிக்பாஸ் விளையாட்டை இரண்டு விதமாக விளையாடலாம். ஆரி விளையாடியது போன்றும் விளையாடலாம், நான் விளையாடிய மாதிரி விளையாடலாம். என்னை ரன்னராக தேர்வு செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி
நான் மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் பேசியிருக்கிறேன். மனதிற்குள் வைத்து இருந்தால் அது அழுக்கு. அதனால்தான் நான் மனதில் எதையும் வைத்திருக்கவில்லை. ஒரு சில இடங்களில் தவறாக நடந்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நானும் என்னுடைய தவறை பார்த்து திருத்தி கொள்வேன். நம்புங்க நானும் நல்லவன் தான் என்று உருக்கமாக பேசினார்
மேலும் பாலாஜிக்கு பிக்பாஸில் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரி, பாலாஜி ஆகிய இருவருக்கும் கமல்ஹாசன் ஏவியை போட்டுக் காட்டினார். அதில் ஆரிக்கு மிகவும் பாசிட்டிவ் காட்சிகளாகவும் பாலாஜிக்கு சண்டை போட்ட நெகட்டிவ் காட்சிகளாகவும் இருந்தது. பாலாஜி அதைப் பார்த்து ரொம்பவே ஃபீல் செய்ததும் திரையில் தெரிந்தது. இருப்பினும் இறுதியில் ஆரியின் வெற்றியை அவர் மனதார கொண்டாடியதால் அவரும் மக்கள் மனதில் நின்று விட்டார் என்றுதான் கூற வேண்டும்