கட்சியில் சேர்வதா? ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறேன்:டிடிவி
இன்று காலை ஆறுகுட்டி அமமுகவை அதிமுகவுடன் சேர்த்துவிட வேண்டும் என்று கூறியிருந்தார். சேராவிட்டால் அதிமுக காணாமலேயே போய்விடும் என்றும் அவர் கூறியிருந்தார். இது அதிமுக மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்படி கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஒட்டுமொத்த அதிமுக முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் என்னால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது என்றும் நாங்கள் எந்த ஒரு தவறும் செய்யவில்லை என்றும் பொது செயலாளர்டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த அதிமுகவின் முடிவு வந்த பிறகுதான் எனது முடிவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரிடம் ஆலோசித்து எடுப்பேன் என்றும் பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். சுயபரிசோதனை செய்ய வேண்டிய இடத்தில் இருப்பதால் அதிமுகவில் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
