Tamil Nadu
சசிகலாவின் முடிவு எனக்கு வருத்தமே: டிடிவி தினகரன்
அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவு தனக்கு வருத்தமே என டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்
நேற்றிரவு சசிகலா வெளியிட்ட அறிக்கையில் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவு அதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அமமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘அரசியலை விட்டு சசிகலா ஒதுங்க எடுத்த முடிவால் தான் சோர்வடைந்து உள்ளதாகவும் அவரிடம் பல மணி நேரம் வாதாடினேன் என்றும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரை நிர்ப்பந்திக்க என்னால் முடியவில்லை என்றும் கூறினார்
ஆனால் அதே நேரம் அரசியலை விட்டு ஒதுக்குவதால் சசிகலாவுக்கு பின்னடைவு என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தேர்தலுக்குப்பின் அதிமுகவை மீட்பது குறித்து சட்டப் போராட்டம் நடத்த அவர் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தினகரனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
