பதவி விலக தயார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பால் பரபரப்பு..!

நான் வகிக்கும் பதவியில் எனக்கு சலிப்பு ஏற்பட்டால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என தமிழக கவர்னர் ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் ரவிக்கும் ஆளும் திமுகவுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்து வருகிறது என்பதும் ஆளுநர் பேசிய அனைத்து கருத்துகளையும் திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

rn ravi இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக சென்ற ஆளுநர் ஆர்என் ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி அதன் பிறகு மாணவ மாணவிகளுடன் உரையாடினார்.

அப்போது அவர் ’நான் ஐபிஎஸ் பதவியில் இருந்த போது மகிழ்ச்சியாக இருந்தேன் என்றும் ஆளுநர் பதவியையும் தற்போது மகிழ்ச்சியாக பணியாற்றுகிறேன் என்றும் நாம் எந்த ஒரு பதவியில் இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை நான் வகிக்கும் பதவியில் எனக்கு மகிழ்ச்சியே இல்லை என்ற நிலை ஏற்பட்டால் எனது வேலையில் சலிப்பு ஏற்பட்டால் உடனே விலகி விடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

rn ravi1மேலும் மொபைல் போன்களில் மாணவர்கள் அதிக நேரத்தை கழிக்க வேண்டாம் என்றும் பாடத்தில் கவனம் செலுத்தி நன்றாக படிக்க வேண்டும் என்றும் குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்கள் கண்டிப்பாக நீண்ட நேரம் உழைக்க வேண்டும் என்றும் மாணவ மாணவிகள் தங்களை ஒருமுகப்படுத்தி கொள்ள தினமும் யோகாசனம் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

மறைந்த தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்து இந்தியாவின் மிகப்பெரிய பதவியை பெற்றார் என்றும் தன் கனவை நம்பி அவர் கடுமையாக உழைத்ததால் பல சாதனைகளை படைத்தார் என்றும் கூறினார்.

மேலும் அவர் ராமநாதபுரத்தை தொடர்ந்து பரமக்குடியில் இமானுவேல் சேகரன், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஆகிய நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுவதாக கூறி ஆளுநரின் வருகைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் மதிமுக தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டினர் என்பது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.