சொத்துப்பட்டியல் வெளியிட நான் ரெடி.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெத்தியடி பதில்!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக- பாஜக இடையே கடும் மோதல்கள் நிலவி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினத்தில் ஆடுகளை வளர்த்து வரும் அண்ணாமலை எப்படி 5 லட்சம் மதிப்புள்ள ரபேல் வாட்ச் வாங்கியுள்ளார் என்ற கேள்வியை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பான ரசீதை வெளியிட முடியுமா? எனவும் தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? என விமர்சனம் செய்திருப்பது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் திமுகவினர் என்னுடைய ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருப்பதாக பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் பாஜவில் தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி, 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அறிக்கைகள் சமர்பிக்க தயார் என கூறியுள்ளார்.

நான் ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள் மற்றும் ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தும் பாதயாத்திரையின் முதல் நாளில் பொது வெளியில் வெளியிட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இதில் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க தயார் நிலையில் இருப்பதாகவும், இதே போல் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் வெளியிட தயாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.