Connect with us

தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமக்க நான் தயார்- அண்ணாமலை ஆவேசம்;

202108120843172026 Tamil News Tamil News Annamalai says PM Modi sown hope in minds farmers SECVPF

Tamil Nadu

தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமக்க நான் தயார்- அண்ணாமலை ஆவேசம்;

இன்றைய தினம் சட்டப்பேரவையில் மிகவும் காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஏனென்றால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக பேரவையில் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு பேசினார். இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முதல்வர் ஸ்டாலின் விரைவில் இதுகுறித்து  முடிவெடுப்பார் என்றும், அவர் தர்மபுரம் ஆதீனத்திடம் நேரில் பேசி சுமுகமான முடிவு கிடைக்கும் என்றும் சேகர்பாபு கூறினார்.

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தருமபுரம் ஆதீனத்தை  தோளில் சுமப்பேன் என்று ட்விட்டரில் கூறியுள்ளார். தர்மபுரம் ஆதீனத்தை  தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என அரசுக்கு தெரிவிக்கிறேன் என்று ட்விட்டரில் பகிரங்கமாக கூறினார்.

சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதீனத்திடம் கோரிக்கை வைப்போம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வை நடத்தி காட்ட தமிழக பாஜக தயார் என்றும் கூறினார். தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் மீதான தடை தமிழக நாகரிகம் பல கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top