மக்கள் மத்தியில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றுள்ளவர் இயக்குனர் சங்கர். இவர் ரஜினி கமல் விஜய் என பெரும் பிரபலங்களுக்கு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்கத்தில் வெளியான எந்திரன் என்ற திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்லதொரு சாதனை படைத்து மக்களிடையே மேலும் ரஜினிக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ என்ற திரைப்படம் நடிகர் விக்ரமுக்கு பல்வேறு விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது.
இந்நிலையில் தற்போது தான் உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருவதாக கூறப்பட்டது. தற்போது அதனை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம். மேலும் லைக்கா நிறுவனம் மற்றும் இயக்குனர் சங்கர் இடைக்கிடையே சுமுகமான பேச்சு வார்த்தை இல்லாததால் சங்கர் மீது வழக்கு தொடுத்தது. அதன்படி இயக்குனர் சங்கர் எந்திரன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறொரு படத்தை இயக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது .
தற்போது அது குறித்து வழக்கு விசாரிக்கப்பட்டது, அதில் இயக்குனர் சங்கர் உயர்நீதிமன்றத்தில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தியன்2 படத்தின் தாமதத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமே காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் முன்னதாக கூறியிருந்த தொகையைவிட தயாரிப்பு செலவை 250 கோடியாக குறைத்த போதும் லைக்கா நிறுவனம் தாமதம் செய்ததாகவும் இயக்குனர் சங்கர் கூறியுள்ளார். மேலும் முதலில் திரைப்படத்தில் நாயகனாக நடித்த நடிகர் கமலஹாசனுக்கு மேக்கப் அலர்ஜி ஏற்பட்டதால் படம் தாமதம் ஆனது. அதன் பின்னர் ஊரடங்கு காரணமாக மேலும் படப்பிடிப்பு தாமதமானது. இதனால் இயக்குனர் சங்கர் தயாரிப்பு பணியில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நான் பொறுப்பல்ல என்று உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.