இலங்கையில் இன்று கலவரம் வெடித்துள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து கட்சிகள், பொதுமக்களும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும் கலவரக்காரர்கள் இன்றைய அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் அவர் தப்பி ஓடியுள்ளார். மேலும் தற்போது பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வந்து நிலையில் அவரின் அலுவலகத்தில் இருந்து பதவி விலக ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்தது.
ரணில் விக்கிரமசிங்க ட்விட்டர் பக்கத்தில் பதவி விலக முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதன்படி இலங்கையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்கிரமசிங்கே முடிவெடுத்துள்ளார்.
மக்களின் நலன் கருதி அனைத்து கட்சி அரசு அமைய பதவி விலக முடிவு செய்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க ட்விட் செய்துள்ளார். ஆயினும் தற்போது வரை ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.