முதல் போட்டியில் ஐதராபாத் வெற்றி, 2வது போட்டியில் சிஎஸ்கே பேட்டிங்

8697c5c46e7aba5db30d915298acf273-2-2

இன்று ராமநவமி விடுமுறை நாளை முன்னிட்டு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது 

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 120 ரன்கள் மட்டுமே அடுத்த நிலையில் 18.4 ஓவர்களில் ஹைதராபாத் அணி 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் இன்று நடைபெறும் 2-வது போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்றதை அடுத்து சென்னை அணியின் பேட்டிங் செய்து வருகிறது. சென்னை அணியின் ருத்ராஜ் மற்றும் டிபிளஸ்சிஸ் ஆகியோர் அதிரடியாக பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசி வருகின்றனர்

b631f1093c130903a77435d7079a7f1b

சற்றுமுன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment